சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானை முந்தி இந்தியா புதிய சாதனை!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக வெற்றி பெற்ற அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை தகர்த்து இந்தியா அணி புதிய சாதனையை படைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா விளையாடி வரும் நிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா தான் விளையாடிய நான்கு போட்டிகளில், மூன்றில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. இந்த தொடரின் நான்காவது போட்டியில் பெற்ற வெற்றி இந்திய அணியின் 136 டி20 வெற்றி ஆகும்.
இதுவரை 213 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் இந்திய அணி அதில் 136 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. பாகிஸ்தான் அணி 226 டி20 போட்டிகளில் விளையாடி 135 வெற்றிகளை பெற்று உள்ளது. இதன் மூலம், பாகிஸ்தான் அணியை முந்தி இந்தியா டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற அணியாக மாறி உள்ளது.
Trending
அது மட்டுமின்றி, பாகிஸ்தான் அணியை விட அதிக வெற்றி சதவீதம் கொண்டுள்ளது இந்திய அணி. இந்தியா 66.66 வெற்றி சதவீதம் கொண்டுள்ளது. பாகிஸ்தான் அணி 62.04 வெற்றி சதவீதம் கொண்டுள்ளது. மேலும், டெஸ்ட் அந்தஸ்து கொண்ட கிரிக்கெட் அணிகளில் அதிக டி20 வெற்றி சதவீதம் கொண்ட அணி இந்தியா தான்.
இதன் மூலம் டி20 போட்டிகளில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இனி இந்தியாவே டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற அணியாகவும், அதிக வெற்றி சதவீதம் கொண்ட அணியாகவும் இருக்கும். இந்திய அணியின் இந்த சாதனையை முறியடிக்க பாகிஸ்தான் அணியால் முடியும் என்றாலும் இந்தியா அடுத்த இரு மாதங்களில் இன்னும் இரண்டு டி20 தொடர்களில் பங்கேற்க உள்ளது.
India now holds the record for most wins in the T20I cricket history! #India #T20WorldCup #INDvAUS #AUSvIND pic.twitter.com/Gd1Kd58asP
— CRICKETNMORE (@cricketnmore) December 1, 2023
அதில் அதிக வெற்றிகளை பெற்றால் இந்தியாவின் வெற்றிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும். அதனால், பாகிஸ்தான் அணி இந்தியாவை எளிதில் முந்தி முதல் இடத்தை பிடித்து விட முடியாது. இந்த சாதனையை தவிர, இந்திய மண்ணில் 2019 பிப்ரவரி முதல் நடந்த 14 டி20 தொடர்களில் இந்தியா இதுவரை தோல்வியே சந்திக்கவில்லை என்ற அரிய சாதனை ஒன்றையும் செய்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now