
இந்திய மகளிர் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் மூன்று போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி மோசமான தோல்வியைச் சந்தித்ததுடன், 3-0 என்ற் கணக்கில் ஆஸ்திரேலிய அணியிடம் ஒயிட்வாஷ் ஆனது.
இந்நிலையில் இந்திய மகளிர் அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது டிசம்பர் 15ஆம் தேதியும், ஒருநாள் தொடர் டிசம்பர் 22ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதில் டி20 தொடரானது நவி மும்பையிலும், ஒருநாள் தொடர் வதோதராவிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், அணியின் துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர். அதேசமயம் இப்போட்டிக்கான இந்திய அணியில் யஷ்திகா பட்டியா. ஷ்ரெயங்கா பாட்டில், பிரியா புனியா உள்ளிட்டோர் காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்கவில்லை.