IND vs AUS, 4th Test: அதிரடியாக தொடங்கிய ஆஸி; கட்டுப்படுத்திய அஸ்வின், ஷமி!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்களைச் சேர்த்துள்ளது.
இந்தியவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இதைத்தொடர்ந்து டெல்லியில் நடந்த 2ஆவது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. பின்னர், இந்தூரில் நடந்த 3வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உள்ளது. இதனால், தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று தேதி தொடங்கியது.
Trending
இப்போட்டியை காண இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசும் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் - உஸ்மான் கவாஜா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் பவுண்டரிகளாக அடித்துதள்ளிய டிராவிஸ் ஹெட் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 32 ரன்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுசாக்னேவும் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் முகமது ஷமி பந்துவீச்சில் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
பின்னர் கவாஜாவுடன் இணைந்த ஸ்டீவ் ஸ்மித் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன்மூலம் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 75 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கவாஜா 27 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 2 ரன்களிலுடனும் களத்தில் உள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now