2-mdl.jpg)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ராஜ்கோட்டியில் நடைபெற்று முடிந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்று அசத்தியது.
இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அறிவித்துள்ளது. அதன்படி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியில் இளம் அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 இடங்கள் முன்னேறி 15ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலம் அவர் தரவரிசையில் இந்த உயரத்தை எட்டியுள்ளார்.
அதேசமயம் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 153 ரன்களை எடுத்ததன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் 12 இடங்கள் முன்னேறி 13ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். மற்றபடி இப்பட்டியளின் முதலிடத்தில் நியூலாந்தின் கேன் வில்லியமன் தொடர்ந்து முதலிடத்தைக்கவைத்துள்ளார். மேலும் டெஸ்ட் பேட்டர்களுக்கான தவரிசையில் இந்திய வீரர்களில் விராட் கோலி(07ஆம் இடம்) மட்டுமே டாப் 10 வரிசையில் இடம்பிடித்துள்ளார்.