IND vs ENG: முதல் போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவன்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி 06ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. ஏனெனில் தற்போதுள்ள இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் போன்ற வீரர்களுடன், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா உள்ளிட்டோரும் இடம்பிடித்துள்ளதால் இந்த அணியில் யார் யாருக்கும் இடம் கிடைக்கும் என்ற குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில் இப்போட்டிக்கான கணிக்கப்பட்ட இந்திய அணியின் பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
Trending
தொடக்க வீரர்கள்
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தொடக்க வீரராகக் களமிறங்குவார். அதேசமயம் மறுமுனையில் ஷுப்மான் கில் மற்றொரு தொடக்க வீரர் இடத்தை பிடிப்பார் என்பது உறுதியாகியுள்ளது. ஏனெனில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் துணைத் கேப்டனாகவும் ஷுப்மான் கில்லை தேர்வாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளதால், நிச்சயம் அவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பது உறுதியாக தெரிகிறது. இதன் காரணமாக அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது வாய்ப்புக்காக இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
விக்கெட் கீப்பர் யார்
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விக்கெட் கீப்பிங் பொறுப்பை யார் பெறுவார்கள் என்பது தற்போது வரை தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில் இந்த போட்டியில் ரிஷப் பந்த் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இரு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். ஆனால் தற்போதுள்ள அணியில் மிடில் ஆர்டரை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கேஎல் ராகுலுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவே அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும் ரிஷப் பந்தும் அதிரடியாக விளையாடும் திறனை கொண்டுள்ளதால், இவர்களில் யாருக்கு லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ரவீந்திர ஜடேஜா இடம்பிபெறுவாரா?
மேலும், இத்தொடருக்கான இந்திய அணியின் லெவனில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் இடம் பிடிப்பதும் உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் இந்த அணியில் அக்ஸர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களும் இடம்பிடித்துள்ளதால் இவர்களில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது தவிர, காயத்தில் இருந்து மீண்டுள்ள குல்தீப் யாதவும் சுழற்பந்துவீச்சாளருக்கான போட்டியில் இருப்பதால் இதிலிருந்து இரண்டு வீரர்களுக்கு மட்டுமே பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த்/கேஎல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா/வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி/ஹர்ஷித் ராணா.
Win Big, Make Your Cricket Tales Now