
இந்திய அணி சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடியதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இந்திய அணி வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதனையடுத்து இந்திய அனி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் 2025ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய அணி விளையாடும் போட்டி அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தவகையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டெஸ்ட் தொடரிலும், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது.
இதில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது அக்டோபரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவிலும் நடைபெறும் என்று கூறப்படுகிரது. இருப்பினும் இத்தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையானது வெளியாகவில்லை.