Advertisement

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: இரண்டாம் இடத்தை தக்கவைத்தது இந்தியா!

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 58.93 சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறது.

Advertisement
India Strengthen World Test Championship Final Chances With Series Sweep Over Bangladesh
India Strengthen World Test Championship Final Chances With Series Sweep Over Bangladesh (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 25, 2022 • 07:13 PM

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்பாக புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலில் மோதும். 2019 - 2021 காலக்கட்டத்தில் நடத்தப்பட்ட முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவும் நியூசிலாந்தும் முதலிரண்டு இடங்களை பிடித்து இறுதிப்போட்டியில் மோதின. இதில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து கோப்பையை வென்று சாதனை படைத்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 25, 2022 • 07:13 PM

அதற்கடுத்து 2021-2023ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடந்துவருகிறது. இந்த காலக்கட்டத்தில் நட்க்கும் அனைத்து டெஸ்ட் போட்டிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தான். இந்த முறை ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்தின. ஆஸ்திரேலியா முதலிடத்திலும் தென்னாப்பிரிக்கா 2ஆம் இடத்திலும் இருந்தன.

Trending

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தோற்ற தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றி விகிதம் 75 சதவிகிதத்திலிருந்து 54.55 சதவிகிதமாக குறைந்தது. டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றுவரும் ஆஸ்திரேலிய அணி 76.92 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வலுவாக நீடிக்கிறது. 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா தோற்ற அதேவேளையில், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்ற இந்திய அணி 55.77 சதவிகிதத்துடன் 2ஆம் இடத்திற்கு முன்னேறியது. இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டிலும் இந்திய அணி வெற்றி பெற்றதால் வெற்றி விகிதம் 58.93 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ஆம் இடத்தில் நீடித்து வருகிறது. 

இப்பட்டியளின் 3ஆம் இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா இந்தியாவிற்கு கடும் போட்டியாளர் என்றாலும், ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆடவிருக்கும் 2 டெஸ்ட் போட்டிகளும் அந்த அணிக்கு சவாலாக இருக்கும். அவற்றில் வெற்றி பெறுவது கடினம். மேலும் அடுத்ததாக இந்தியாவில் நடக்கவிருக்கும் ஆஸ்திரேலிய தொடரிலும் இந்திய அணி வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பிருப்பதால் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முன்னேற நல்ல வாய்ப்புள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement