வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா; போட்டி அட்டவணை வெளியீடு!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான போட்டி அட்டவணையை இரு கிரிக்கெட் வாரியங்களும் நேற்று அறிவித்தன. அதன்படி முதல் ஒருநாள் போட்டி ஜூலை 22 ஆம் தேதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை 24 ஆம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜூலை 27 ஆம் தேதியும் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
Trending
அதைத்தொடர்ந்து முதல் டி20 போட்டி ஜூலை 29 ஆம் தேதி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்திலும், 2 மற்றும் 3 ஆவது டி20 போட்டிகள் ஆகஸ்ட் 1 மற்றும் 3 ஆம் தேதிகளில் வார்னர் பார்க், செயின்ட் கிட்ஸ் மைதானத்திலும், 4 மற்றும் 5 ஆவது போட்டிகள் ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் புளோரிடாவில் உள்ள ப்ரொவார்ட் கவுண்டி மைதானத்திலும் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியிம் கேப்டன் நிக்கோலஸ் பூரன், “வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடுவதற்கு பெயர் பெற்ற கிரிக்கெட்டின் பிராண்டை மீட்டெடுக்க ஆர்வமாக இருக்கும் இளம் அணி எங்களிடம் உள்ளது. இந்த அணிக்கு நான் பொறுப்பேற்கும்போது, எப்பொழுதும் போட்டித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதுதான் லட்சியமாக உள்ளது. வரவிருக்கும் டி20 மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைகளுக்கான எங்கள் தயாரிப்புகளைச் சிறப்பாகச் செய்ய இந்தத் தொடரைப் பயன்படுத்த விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவைத் தொடர்ந்து வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளும் வெஸ்ட் இண்டீஸுல் சுற்றுப்பயணம் செய்யவுள்ளனர். அதன்படி வஙக்தேச அணி இரண்டு டெஸ்ட், 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now