X close
X close

இந்தியா vs ஆஸ்திரேலியா, 3ஆவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை இந்தூரில் உள்ள ஹோல்கார் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 28, 2023 • 18:58 PM

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் முழு ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, இரண்டு போட்டிகளிலும் மூன்று நாட்களில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில்தான் துவங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென்று மார்ச் 1ஆம் தேதி (நாளை) நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை தர்மசாலாவில் இருந்து இந்தூருக்கு மாற்றியுள்ளனர். அதன்படி இந்தூரில் உள்ள ஹோல்கார் கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

Trending


போட்டி தகவல்கள்

 • மோதும் அணிகள் - இந்தியா vs ஆஸ்திரேலியா
 • இடம் - ஹொல்கார் கிரிக்கெட் மைதானம், இந்தூர்
 • நேரம் - காலை 9.30 மணி

போட்டி முன்னோட்டம்

இந்தியாவைப் பொறுத்தவரை,  கே.எல்.ராகுல் சமீப காலமாகவே சொதப்பி வருவதால், இவரை இரானி கோப்பை தொடரில் விளையாட வைத்து, பார்முக்கு கொண்டுவர பிசிசிஐ முடிவு செய்தது. ஆனால், ரோஹித் ஷர்மாவும், டிராவிட்டும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கே.எல்.ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மூன்றாவது டெஸ்டிலும் ஷுப்மன் கில்லுக்கு மாற்றாக கே.எல்.ராகுல் தான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் பந்துவீச்சு வரிசையில் ஏதேனும் மாற்றங்கள் நிகழலாம் என்று தெரிகிறது. சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஷ்வின் (14) மற்றும் ரவீந்திர ஜடேஜா (17) கூட்டணி தொடரில் வீழ்த்தப்பட்ட 40 விக்கெட்களில் 31 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். மூன்றாவது சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேல் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றவில்லை என்றாலும், இரண்டு இன்னிங்ஸ்களில் 158 ரன்கள் எடுத்த இந்தியாவின் இரண்டாவது அதிகபட்ச ரன் எடுத்த வீரராக உள்ளார். எனவே, இந்த வின்னிங் காம்பினேஷனை இந்திய அணி நிர்வாகம் மாற்ற வாய்ப்பில்லை.

முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் வேகப்பந்துவீச்சு பார்ட்னர்ஷிப்பும் உடைக்கப்பட்ட வாய்ப்பில்லை. டெல்லியில் நடந்த 2வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் ஷமி 4 விக்கெட்டுகள் உட்பட 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மறுபுறம், சிராஜ் இரண்டு டெஸ்டிலும் இன்னிங்ஸின் ஆரம்ப கட்டங்களில் திறம்பட செயல்பட்டு இருந்தார்.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் பாட் கம்மின்ஸ் குடும்ப சூழ்நிலை காரணமாக நாடு திரும்பியுள்ளதால் 3ஆவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸி அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் டேவிட் வார்னருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக மேத்யூ ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இதைத்தவிர நட்சத்திர வீரர்களான மிட்செல் ஸ்டார்க், காமரூன் க்ரீன், மைக்கேல் ஸ்வெப்சன் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளதால் அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அந்த அணி முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதே தோல்விக்கு காரணம் என்பதால் நிச்சயம் இப்போட்டியில் அதிக கவனம் செலுத்தி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

 • மோதிய போட்டிகள் - 104
 • இந்தியா - 32
 • ஆஸ்திரேலியா - 43
 • முடிவில்லை - 28
 • டிரா - 0

உத்தேச லெவன்

இந்தியா - ரோஹித் சர்மா (கே), கே.எல். ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா - மாட் ரென்ஷா, உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவன் ஸ்மித் (கே), டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், டாட் மர்பி, ஸ்காட் போலண்ட்/லான்ஸ் மோரிஸ்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

 • விக்கெட் கீப்பர்கள் - அலெக்ஸ் கேரி, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப்
 • பேட்டர்ஸ் - மார்னஸ் லாபுசாக்னே, ரோஹித் சர்மா, உஸ்மான் கவாஜா
 • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல்
 • பந்துவீச்சாளர்கள் - முகமது ஷமி, நாதன் லியான், மிட்செல் ஸ்டார்க்

கேப்டன்/ துணைக்கேப்டன் தேர்வு -ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரோஹித் சர்மா, உஸ்மான் கவாஜா


Win Big, Make Your Cricket Tales Now