
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதின. ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 63 ரன்களும், விராட் கோலி 50 ரன்களும் எடுத்தனர். ரோஹித் சர்மா, கே.எல் ராகுல் ஆகியோர் வழக்கம் போல் இந்த போட்டியிலும் இந்திய அணிக்கு ஏமாற்றத்தையே கொடுத்தனர்.
அதன்பின் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் ஓவரில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன் குவித்தது. பாரபட்சம் பார்க்காமல் அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்தையும் சிதறடித்த அலெக்ஸ் ஹேல்ஸ் – ஜாஸ் பட்லர் ஜோடி, பவர்ப்ளே ஓவர்களிலேயே 63 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியின் வெற்றியை இலகுவாக்கியது.