சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்தியா vs நியூசிலாந்து, இறுதிப்போட்டி - உத்தேச லெவன்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட லெவனை இப்பதிவில் பார்ப்போம்.

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில் இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
முன்னதாக இவ்விரு அணிகளும் மோதிய லீக் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது. இதனால் இப்போட்டியிலும் இந்திய அணி தங்களது ஆதிக்கத்தை தொடர விரும்பும். அதேசமயம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் நியூசிலாந்து அணியும் இப்போட்டியை எதிர்கொள்ளும் என்பதால், இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
Trending
இந்திய அணி
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த இரண்டு போட்டிகளாக நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. அதிலும் குறிப்பாக வருண் சக்ரவர்த்தி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது இந்திய அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் செல்வது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற கருத்துகளும் உள்ளது.
அப்படி ஒருவேளை இந்திய அணி கூடுதல் வேகப்பந்து வீச்சாளரை லெவனில் சேர்க்கும் பட்சத்தில், குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்ரவர்த்தி ஆகியோரில் ஒருவர் வெளியேற்றப்படலாம். தற்போது இருக்கும் ஃபார்மில் வருண் சக்ரவர்த்தியை வெளியேற்றுவது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். அதேசமயம் குல்தீப் யாதவ் கடந்த போட்டியில் ரன்களை கொடுத்துள்ளதால் அவரின் இடம் தான் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. மற்றபடி அணியில் அந்த மாற்றமும் இருக்காது.
இந்தியா உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ்.
நியூசிலாந்து அணி
மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரையில் டாம் லேதம், ரச்சின் ரவீந்திரா, வில் யங், கிளென் பிலீப்ஸ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அந்த அணியின் மூத்த வீரர் கேன் வில்லியம்சனும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சை பொறுத்தமட்டில் மேட் ஹென்றி காயம் காரணமாகா இப்போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகமாகவுள்ளது. ஒருவேளை அவர் விளையாடாத பட்சத்தில் நாதன் ஸ்மித் அல்லது ஜேக்கப் டஃபி ஆகியோர் லெவனில் சேர்க்கப்படலாம். இதுதவிர்த்து கைல் ஜேமிசன், வில்லியம் ஓ ரூர்க் ஆகியோருடன் மைக்கேல் பிரேஸ்வெல், ரச்சின் ரவீந்திராவும் சில ஓவர்களை வீச முடியும் என்பது அணிக்கு கூடுதல் சாதக்கத்தை வழங்கும்.
Also Read: Funding To Save Test Cricket
நியூசிலாந்து உத்தேச லெவன்: வில் யங், ரச்சின் ரவீந்திரன், கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம் (வாரம்), மைக்கேல் பிரேஸ்வெல், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர் (கேட்ச்), கைல் ஜேமிசன், மேட் ஹென்றி/நாதன் ஸ்மித், வில்லியம் ஓ'ரூர்க்.
Win Big, Make Your Cricket Tales Now