
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
IND vs WI, 1st Test, Cricket Tips: இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிகு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (அக்டோபர் 2) அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
IND vs WI: Match Details
- மோதும் அணிகள் - இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- இடம் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அஹ்மதாபாத்
- நேரம்- அக்டோபர் 02, காலை 9.30 மணி (இந்திய நேரப்படி)
IND vs WI: Live Streaming Details
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.
IND vs WI: Head-to-Head in Test
- Total Matches: 100
- India: 23
- West Indies: 30
- No Result/Drawn: 47