சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சில சாதனைகளை படைக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இதையடுத்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கட்டாகில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
Trending
ஒருநாள் போட்டிகளில் 11000 ரன்கள்
இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 132 ரன்கள் எடுத்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் 11000 ரன்களை எட்டிய நான்காவது இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் உலகின் பத்தாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெறுவார். இதுவரை இந்திய அணிக்காக 266 ஒருநாள் போட்டிகளில் 258 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 10868 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை, இந்தியாவுக்காக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலி மட்டுமே இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளனர்.
சச்சின் டெண்டுல்கரை முந்தும் வாய்ப்பு
ஒருவேளை இப்போட்டியில் ரோஹித் சர்மா 11ஆயிரம் ரன்களை எட்டும் பட்சத்தில், இந்த மைல் கல்லை அதிவேகமாக எட்டிய இரண்டாவது வீரர் எனும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார். இந்திய அணியின் முன்னால் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது 276ஆவது இன்னிங்ஸில் 11ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். இந்தப் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 222 இன்னிங்ஸ்களில் 11ஆயிரம் ரன்களை எட்டி முதலிடத்தில் உள்ளார்.
ராகுல் டிராவிட் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா 22 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட்டை முந்தி நான்காவது இடத்தைப் பிடிப்பார். இந்திய அணியின் முன்னாள் வீரரும், தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக 344 ஒருநாள் போட்டிகளில் 318 இன்னிங்ஸ்களில் விளையாடி 10,889 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு
இப்போட்டியில் ரோஹித் சர்மா ஒரே ஒரு சிக்ஸர் அடித்தால், ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் கிறிஸ் கெயிலை முந்தும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். தற்போது இந்திய அணியின் ரோஹித் சர்மா (257 இன்னிங்ஸ்) மற்றும் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் கெயில் (294 இன்னிங்ஸ்) ஆகியோர் தலா 331 சிக்ஸர்களை அடித்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளனர். இந்த பட்டியலில் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹித்தின் மோசமான ஃபார்ம்
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் சமீப காலங்களில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் கவலையளிக்கும் வகையில் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் அவர் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். அதேசமயம் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் அவர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இப்படியான சூழலில் அவர் தனது ஃபார்மை மீட்டெடுக்கும் அழுத்ததிற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now