Advertisement

ரிஷப் பந்த் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் தான் - காவல்துறை!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் கார் விபத்து குறித்து ரூர்கீ காவல்துறையினர் முதற்கட்ட தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் எனக்கூறியிருப்பதால் ரசிகர்கள் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement
Indian cricketer ‘Lucky to survive’ after FATAL car accident, says Police
Indian cricketer ‘Lucky to survive’ after FATAL car accident, says Police (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 30, 2022 • 12:17 PM

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் நேற்று உத்தர்காண்ட்-ல் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். விமானத்தில் செல்ல விரும்பாத பந்த், சாலை மார்கமாக பயணிக்க விரும்பியுள்ளார். நேற்று இரவு உத்தரகாண்ட்-ல் இருந்து புறப்பட்ட அவர், இன்று அதிகாலை ரூர்கி நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 30, 2022 • 12:17 PM

விபத்து உண்டான உடனேயே கார் தீப்பிடித்ததால் அங்கிருந்தோர் ரிஷப் பந்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் ரிஷப் பந்துக்கு என்ன நடந்தது என்பது குறித்து உள்ளூர் காவல்துறையினர் முதற்கட்ட தகவலை கொடுத்துள்ளனர். 

Trending

அதில், “ரிஷப் பந்த் மெர்சிடெஸ் பென்ஸ் என்ற வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். அதிகாலை 5.30 மணியளவில் டெல்லி - ஹரிதுவார் நெடுஞ்சாலை அருகே சென்ற போது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. தீப்பிடிப்பதற்கு முன்பாக சில முறை கார் சாலையிலேயே வேகமாக சுழன்றுள்ளது.

பந்த் ஓட்டி வந்த கார் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது. இதுபோன்ற விபத்து ஏற்பட்டு, தீப்பிடித்த பின்னரும் அவர் உயிர்பிழைத்ததே அதிர்ஷ்டம் தான். அவருக்கு தலை, கை மற்றும் வலது கால் மூட்டிலும் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் அவர் சுயநினைவில் தான் இருந்ததால் என்ன நடந்தது என்பதை தெளிவாக கூற முடிந்தது. பந்த்க்கு தீக்காயங்களும் ஏற்பட்டுள்ளது.

ஹரிதுவார் நெடுஞ்சாலையில் காலை நேரத்தில் சாலை மூடும் அளவிற்கு எந்தவித பனிப்பொழிவும் இல்லை. இதனால் அவர் தூக்கத்தில் வாகனத்தை ஓட்டி தான் விபத்து நடந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. எனினும் அவரின் கார் பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. அதில் இருந்து ஏதாவது தகவல் கிடைக்குமா என்று முயன்று வருவதாக” காவல்துறையினர் கூறியுள்ளனர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement