வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து புஜாரா, உமேஷ் யாதவ் நீக்கம்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மிகவும் சுமாராகச் செயல்பட்ட புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இடம் தோற்று சாம்பியன் பட்டத்தை இந்திய அணி இழந்தது. இதற்கு அடுத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது.
இந்த தொடரில் முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும், அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரும் நடக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மிகவும் சுமாராகச் செயல்பட்ட புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Trending
இவர்கள் இருவருக்குப் பதிலாக ஜெய்ஸ்வால் மற்றும் முகேஷ் குமார் அணியில் சேர்க்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்தியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை மனதில் வைத்து வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மட்டும் கேப்டன் ரோஹித் சர்மாவை விளையாட வைக்கவும் ஆலோசிக்கப்படுகிறது.
மற்றபடி விராட் கோலி, ரஹானே இருவரும் மூத்த வீரர்களாக அணியில் தொடர்வார்கள். ரோஹித் சர்மா விளையாடவில்லை என்றால் ரஹானே கேப்டனாக வழி நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒருநாள் உலகக்கோப்பையை மனதில் வைத்து தொடர்ந்து விளையாடி வரும் வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி இருவருக்கும் டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறுதியாக இந்தச் சுற்றுப்பயணத்தில் நடக்கும் டி20 தொடருக்கு ஜெய்ஷ்வால், திலக் வர்மா, ஜிதேஷ் ஷர்மா, ரிங்கு சிங் என மொத்தமாக புதிய வீரர்கள் அனைவருக்கும் வாய்ப்பு தருவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணித்தேர்வு இந்திய எதிர்கால கிரிக்கட்டுக்கான தேர்வாக அமையும் என்று கருதப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now