Advertisement

ஐசிசி தரவரிசை: டாப் 10-ல் நீடிக்கும் ரோஹித், ரிஷப்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 7ஆம் இடத்தை தக்கவைத்துள்ளார்..

Bharathi Kannan
By Bharathi Kannan February 22, 2023 • 19:32 PM
Indian skipper Rohit Sharma climbs to the No.7 spot at the ICC Men’s Test rankings!
Indian skipper Rohit Sharma climbs to the No.7 spot at the ICC Men’s Test rankings! (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டுகளையும் இந்திய அணி வென்றுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா, நாகபுரி டெஸ்டில் சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். 2ஆவது டெஸ்டில்  32, 31 ரன்கள் எடுத்தார். 

இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து 7ஆவது இடத்தை தக்கவத்துள்ளார். இவருக்கு முன்னதாக 6ஆவது இடத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்த் உள்ளார் . இவர்கள் இருவரைத் தவிர மற்ற எந்த இந்திய வீரரும் டாப் 10 பட்டியளில் இடம்பிடிக்கவில்லை.

Trending


இப்போட்டியளின் முதலிடத்தில் ஆஸ்திரேலியா மார்னஸ் லபுசாக்னேவும், இரண்டாம் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித்தும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 16ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement