
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மொத்தமாக சொதப்பியதன் காரணமாக இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி இத்தொடரை இழந்துள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் தவறவிட்டது.
இந்த படுமோசமான தோல்வியின் காரணமாக அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில் உள்ளிட்டோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததற்கு, தொடர் முழுவதும் அவர்களின் தற்காப்பு மனப்பான்மையே காரணம் என்று முன்னாள் இந்திய தீப் தாஸ் குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய தீப் தாஸ் குப்தா, நீங்கள் ஒரு அணியைத் தேர்ந்தெடுக்கும்போது, அது உங்கள் மனநிலையைப் பிரதிபலிக்கிறது. அந்தவகையில் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து, இந்திய அணி தற்காப்பு மனப்பான்மையுடன் சென்றதாக நான் உணர்ந்தேன். ஏனெனில் ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணி 8 பேட்டர்களுடன் விளையாடியது தெளிவாக தெரிந்தது. ஏனெனில் இந்த அணியில் வாஷிங்டன் சுந்தரும் ஒரு பேட்டராக மட்டுமே விளையாடினார்.