
இங்கிலாந்தின் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடர்களில் ஒன்று கவுண்டி கிரிக்கெட் தொடரும் ஒன்று. அதன்படி நடப்பாண்டிற்கான கவுண்டி கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று வரும் 53ஆவது போட்டியில் சர்ரே மற்றும் நாட்டிங்ஹாம்ஷைர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சர்ரே அணியானது ரோரி பர்ன்ஸ், சாய் சுதர்ஷன் ஆகியோரது சதத்தின் மூலம் முதல் இன்னிக்ஸில் 525 ரன்களைக் குவித்தது.
இதில் அதிகபட்சமகா ரோரி பர்ன்ஸ் 161 ரன்களையும், சாய் சுதர்ஷன் 105 ரன்களையும் சேர்த்தனர். நாட்டிங்ஹாம்ஷைர் தரப்பில் ஃபர்ஹான் அஹ்மத் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள நாட்டிங்ஹாம்ஷைர் அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஃபிரெட்டி மெக்கன் 69 ரன்களைச் சேர்த்து களத்தில் உள்ளார்.
இந்நிலையில் இப்போட்டியில் சர்ரே அணிக்காக விளையாடி வரும் சாய் சுதர்ஷன் சதமடித்து அசத்தினார். மேலும் கவுண்டி கிரிக்கெட் தொடரில் சாய் சுதர்ஷன் அடிக்கும் முதல் சதமாகவும் இது அமைந்தது. மேற்கொண்டு இவர் தனது சதத்தைப் பதிவுசெய்யும் வகையில் இமாலய சிக்ஸர் ஒன்றையும் விளாசி அசத்தினார். இந்நிலையில் சாய் சுதர்ஷன் சிக்ஸர் விளாசி சதத்தைப் பதிவுசெய்த் காணொளியானது இணைத்தில் வைரலாகி வருகிறது.