
India's Tour Of Australia To Be Played Entirely In Queensland, Confirms CA (Image Source: Google)
இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20, ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்து.
இந்நிலையில் மெல்போர்ன் மற்றும் பெர்த்தில் நடைபெறுவதாக இருந்த இத்தொடரின் போட்டிகள் அனைத்தும், கரோனா அச்சுறுத்தல் காரணமாக குயின்ஸ்லேண்டிற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
அதன்படி செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் தொடர் ஹரூப் பார்க் மைதானத்திலும், பகலிரவு டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கராரா ஓவல் மைதானத்திலும் நடைபெறுமென ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.