IND vs ENG, 2nd Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஆண்டர்சன், பஷீர் ஆகியோருக்கு வாய்ப்பு!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியில் அனுபவர் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், அறிமுக வீரர் சோயப் பஷீர் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலையைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச்சிற்கு பதிலாக அறிமுக சுழற்பந்து வீச்சாளர் சோயப் பஷீர் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Trending
அதேபோல் கடந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனும் இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டு, மார்க் வுட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் இங்கிலாந்து அணி இப்போட்டியில் ரெஹான் அஹ்மத், டாம் ஹார்ட்லி, சோயப் பஷீர் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் மட்டுமே வேகப்பந்து வீச்சாளராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
James Anderson Is Back For England!
— CRICKETNMORE (@cricketnmore) February 1, 2024
- He Replaces Mark Wood
- Shoaib Bashir Replaces Injured Jack Leach#INDvENG #India #TeamIndia #JamesAnderson #England pic.twitter.com/2RM2YWElaM
இவர்களுடன் கடந்த போட்டியில் கலக்கிய ஒல்லி போப், ஜோ ரூட் ஆகியோருடன் பென் டக்கெட், ஸாக் கிரௌலி, ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோருக்கும் இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்து அணி முதல் போட்டியை வென்றுள்ளதால், அதேபாணியில் இரண்டாவது போட்டியிலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி: பென் டக்கெட், ஸாக் கிரௌலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ்(கே), பென் ஃபோக்ஸ், ரெஹான் அஹ்மத், டாம் ஹார்ட்லி, சோயப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
Win Big, Make Your Cricket Tales Now