விசா பிரச்சனையில் சிக்கியதால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட ரெஹான் அஹ்மத்!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக ராஜ்கோடு வந்தடைந்த இங்கிலாந்து வீரர்களில் சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அஹ்மத் விசா பிரச்சனையால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்தா முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (பிப்.15) ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்கு முன்னதாக 10 நாள் விட்ய்முறை இருந்ததால் இங்கிலாந்து அணி அபுதாபி சென்று பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி நேற்றைய தினம் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தது. இந்நிலையில் நேற்று விமான நிலையத்தில் இங்கிலாந்து வீரர் ரெஹான் அஹ்மத் விசா பிரச்சனை காரணமாக தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Trending
ஏனெனில் ரெஹான் அஹ்மத் இந்தியாவிற்கு நுழைய ஒற்றை நுழைவு விசா மட்டுமே வைத்திருந்ததால் அவரை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர் ஏற்கனவே இந்தியா வந்து சென்றிருந்தார். தற்போது 10 தினங்களுக்குள் மீண்டும் வந்ததால் விசா பிரச்சினையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாளை மறுநாள் போட்டி நடைபெறவுள்ளதால், நிலமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு உள்ளூர் அதிகாரிகள் ரெஹான் அஹ்மதுவிற்கு 2 நாள் விசா மட்டுமே வழங்கியுள்ளனர்.
The English team travelled to Abu Dhabi after finishing the second Test at Visakhapatnam as there was a 10-day gap between the second and third match!#INDvENG #India #England #ECB #RehanAhmed pic.twitter.com/G3rHLgbEIc
— CRICKETNMORE (@cricketnmore) February 13, 2024
இதனால் அடுத்த இரு தினங்களுக்குள் ரெஹான் அஹ்மத் விசாவை மீண்டும் புதுபிக்க இங்கிலாந்து அணிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் இங்கிலாந்து வீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் சோயப் பஷீரும் விசா பிரச்சனையில் சிக்கியதோடு, முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now