அறிமுக ஆட்டத்தில் அசத்திய பிரஷித், குணால்; இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்த, இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று புன

இங்கிலாந்த, இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று
புனேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை
முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.
ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்
செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்களை குவித்திருந்தது. இந்திய
அணி தரப்பில் ஷிகர் தவான், விராட் கோலி, கே. எல். ராகுல், குணால் பாண்டியா ஆகியோர்
அரைசதம் கடந்து அசத்தினர்.
இதைத்தொடர்ந்து 318 ரன்களை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர்கள் ஜேசன் ராய்
- பேர்ஸ்டோ இணை சிறப்பான தொடக்கத்தை கொடுத்து, முதல் விக்கெட்டிற்கு 135 ரன்கள்
பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இதையடுத்து அறிமுக வீரர் பிரஷித் கிருஷ்ணா அவர்களது
பார்ட்னர்ஷிப்பை தகர்த்தார்.
அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை
இழந்தனர். அதிலும் அதிரடி வீரர்களான ஸ்டோக்ஸ், மோர்கன், பட்லர், சாம் பில்லிங்ஸ்,
மொயின் அலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமலித்தனர். இதனால் 42.1
ஒவர்களிலேயே இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம்
இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.
இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் பிரசீத் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளையும், தாக்கூர் 3
விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்
இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now