-mdl.jpg)
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய மகளிர் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முந்தினம் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்திரேகர் 4 விக்கெட்டுகளையும், ஸ்நே ரானா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து தங்களது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா ஆகியோரது அதிரடியான அரைசதத்தின் மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 376 ரன்களை குவித்தது.