
ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அடங்கிய தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சுக்குநூறாக்கும் விதமாக தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா ரன்கள் ஏதுமின்றியும், ஸ்மிருதி மந்தனா 10 ரன்களுக்கும் என சர்லோட் டீன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் களமிறங்கிய ஹர்மன்ப்ரீத் கவுர், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், பூஜா வஸ்திரேகர் , ஷ்ரெயாங்கா பாட்டில் என அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.