
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது மே 29ஆம் தேதியும் டி20 தொரானது ஜூன் 06ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு அதிரடி வீரர் வில் ஜேக்ஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பிடித்துள்ள நிலையில், நட்சத்திர ஆல் ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன் இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் பில் சால்ட், லுக் வுட் மற்றும் லியாம் டௌசன் ஆகியோர் டி20 அணிக்கும், டாம் ஹாட்ர்லி ஒருநாள் அணியிலும் இடம்பிடித்துள்ளனர். மேலும் முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் சாதரான வீரராக இந்த தொடரில் விளையாடவுள்ளார். இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.