
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது ஜூலை 27 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதையடுத்து இத்தொடரில் பங்கேறும் இந்தியா மற்றும் இலங்கை டி20 அணிகள் அறிவிக்கப்பட்டு, தற்சமயம் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில் இன்று செய்தியாளர் சந்தீப்பில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “நாங்கள் இதுவரை இரண்டு பயிற்சி அமர்வுகளை மட்டுமே மேற்கொண்டுள்ளோம். அதிலும் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீருடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை.
ஆனால் இரண்டு அமர்வுகளில், அவர் என்னிடம் பேசிய விஷயங்களைப் வைத்து நான் கண்டுபிடித்தது என்னவென்றால், அவரது நோக்கமும் தொடர்பும் மிகவும் தெளிவாக உள்ளது. மேலும் அவர் வீரர்களிடமிருந்து அவர் விரும்புவதைப் போலவும், அவரது தொடர்பு மிகவும் தெளிவாக உள்ளது. அதேசமயம் இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு முன் டி20 போட்டிகளில் எனது செயல்பாடு எனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சிறப்பாக அமையவில்லை.