
காரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்புவதில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து வீரர்கள் தங்களது தாயகம் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மொத்தம் 11 பேர் பங்கேற்றிருந்த நிலையில் 8 பேர் மட்டுமே தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் செய்தி தொடர்பாளர் டேனி ரூபென் கூறுகையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த 11 இங்கிலாந்து வீரர்களில் 8 பேர் தாயகம் திரும்பியுள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறேன். மேலும் தாயகம் திரும்பும் வீரர்கள் 10 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள மூன்று வீரர்கள் ஓரிரு நாள்களில் இங்கிலாந்து அழைத்து செல்லப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.