
IPL 2021: Delhi Capitals players hit the gym after completing quarantine in Dubai (Image Source: Google)
கரோனா தொற்றால் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் இரண்டாம் பகுதி, செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான அட்டவணையையும் பிசிசிஐ அறிவித்தது.
இந்நிலையில் இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்த வகையில் நடப்பு ஐபிஎல் சீசனின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் கடந்த வாரம் அமீரகம் சென்று தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டிருந்தது.
தற்போது தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துள்ள டெல்லி அணி வீரர்கள், தங்கள் பயிற்சிக்கு திரும்பியுள்ளனர். அதன்படி ஸ்ரேயாஸ் ஐயர், அமித் மிஸ்ரா ஆகியோர் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்களை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ட்விட்டர் பக்கத்தி வெளியிட்டுள்ளது.