
IPL 2021: Jasprit Bumrah and Bravo are Playing 100th game for their sides (Image Source: Google)
கரோனா பரவலால் பாதியில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், தற்போது மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்றுமுதல் தொடங்கியுள்ளது.
இதில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இதற்கிடையில் இன்றைய போட்டியில் விளையாடுவதன் மூலம் சிஎஸ்கேவின் டுவைன் பிராவோ, மும்பை இந்தியன்ஸின் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தங்கள் அணிகளுக்காக 100ஆவது போட்டியில் களமிறங்குகின்றன.