
IPL 2021: KL Rahul diagnosed with acute appendicitis, transferred to hospital (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனுமானவர் கே.எல். ராகுல். இந்நிலையில் இவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ராகுல் கடுமையான வயிற்றுவலியால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் கிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கே.எல்.ராகுல் நேற்றிரவு கடுமையான வயிற்று வலி இருப்பதாக பஞ்சாப் கிங்ஸ் மருத்துவர்களிடம் புகார் அளித்தார். அதன்பின் அவருக்கு மருத்துவர்களின் ஆலோசனை படி மருந்துகள் வழங்கப்பட்டது. இருப்பினும் மருந்துகள் ஏதும் பலனளிக்காததால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
Praying for KL Rahul’s health and speedy recovery #SaddaPunjab #PunjabKings #IPL2021 pic.twitter.com/q81OtUz297
— Punjab Kings (@PunjabKingsIPL) May 2, 2021