ஐபிஎல் திருவிழா 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு
நாளை நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் : சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
- இடம் : அருண் ஜெட்லி மைதானம், டெல்லி.
- நேரம் : இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
சர்வதேச கிரிக்கெட்டில் எப்படி இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் பெரும் எதிர்பார்ப்பை கிளப்புமோ அதே அளவிற்கு உள்ளூர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளப்பும் போட்டி என்றால் அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியாக தான் இருக்கும்.
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கிய ஆண்டு முதல் இன்று வரை இவ்விரு அணிகள் மோதிக் கொள்ளும் போது களத்தில் இருக்கும் அதே அனல், சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கிடையிலும் இருக்கும். ல
அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றது மும்பை அணி என்றால், அதிக முறை இறுதிப்போட்டிக்கு சென்றது சென்னை அணியாக உள்ளது. ஆனால் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் அதிக முறை வெற்றியைப் பறித்தது மும்பை அணியே. இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர்.
அதில் மும்பை அணி 19 முறையும், சிஎஸ்கே 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கிரிக்கெட்டில் அன்றைய தினமே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பது இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் பலமுறை உணர முடிந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி அதற்கு சான்று. கடந்த 4 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பை இவ்விரு அணிகளுக்கிடையே மட்டுமே தவழ்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த 4 சீசன்களில் 3 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது மும்பை இந்தியன்ஸ்.
கடந்த சீசனில் இரு அணிகளும் சந்தித்துக் கொண்ட முதல் போட்டியில் சென்னை அணி சாம் கரணின் இறுதிநேர அதிரடிகளால் வெற்றி பெற, இரண்டாவது சந்திப்பில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பழி தீர்த்தது மும்பை இந்தியன்ஸ். நடப்பு சீசனில் இரு அணிகளும் வெற்றி பாதையில் உள்ளதால் போட்டி மீதான எதிர்பார்ப்பு உச்சம் பெற்றுள்ளது. இவ்விரு அணிகளிடையேயான போட்டி என்பது ஃபார்மைப் பொறுத்தது மட்டுமல்ல; போட்டி தின மன நிலையையும் பொறுத்ததே.
மற்ற அணிகளின் ரசிகர்கள் பிளே ஆஃப்க்கான முனைப்பில் இருந்தால், சென்னை மும்பை அணி ரசிகர்களுக்கு கோப்பை வெல்வது மட்டுமே எதிர்பார்ப்பாக இருக்கும். ஹாட்ரிக் சாம்பியன்ஸ் பட்டம் வெல்வதற்கான வாய்ப்பு சென்னை அணிக்கு 2012 ஆம் ஆண்டு இருந்ததைப் போல, மும்பை அணிக்கு இந்த வருடம் உள்ளது. இதனால் நடப்பு சீசன் ஐபிஎல் தொடர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
உத்தேச அணி
மும்பை இந்தியன்ஸ்: குயின்டன் டி காக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கீரோன் பொல்லார்ட், குர்னால் பாண்டியா, நாதன் கூல்டர்-நைல், ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், ஃபாப் டு பிளெசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி , ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், ஷர்துல் தாகூர், லுங்கி இங்கிடி, தீபக் சஹார்.
பிளிட்ஸ்பூல் ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - டி காக்
- பேட்ஸ்மேன்கள் - ரோஹித் ஷர்மா, டு பிளெசிஸ், கெய்க்வாட், ஹர்திக் பாண்டியா
- ஆல்ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா , மொயீன் அலி,பொல்லார்ட்
- பந்து வீச்சாளர்கள் - ராகுல் சாஹர், பும்ரா, லுங்கி இங்கிடி
Win Big, Make Your Cricket Tales Now