Advertisement

ஐபிஎல் 2021: டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Advertisement
IPL 2021: Mumbai Indians won the toss and choose to bowl first
IPL 2021: Mumbai Indians won the toss and choose to bowl first (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 01, 2021 • 07:12 PM

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 01, 2021 • 07:12 PM

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். 

இப்போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜெயாந்த் யாதவிற்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை எந்த மாற்றங்களும் இன்றி களமிறங்கவுள்ளது.

மும்பை இந்தியன்ஸ்: குயின்டன் டி காக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜிம்மி நீஷம், ஹர்திக் பாண்டியா, கீரோன் பொல்லார்ட், குர்னால் பாண்டியா, நாதன் கூல்டர்-நைல், ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், ஃபாப் டு பிளெசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி , ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், ஷர்துல் தாகூர், லுங்கி இங்கிடி, தீபக் சஹார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement