
Punjab Kings opt to bowl (Image Source: Google)
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
இன்றைய போட்டிக்கான மும்பை அணியில் மாற்றங்கள் ஏதுமின்றி விளையாடுகிறது. அதேசமயம் பஞ்சாப் கிங்ஸ் அணியில் முருகன் அஸ்வினுக்கு பதிலாக பிஷ்னோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.