ஐபிஎல் திருவிழா 2021: மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் தகவல்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் : மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
- இடம் : எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை
- நேரம்: இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் படுதோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதிலும் ராகுல், மயாங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரான், தீபக் ஹூடா என அதிரடி வீரர்கள் அணியில் இருக்கும் பட்சத்திலும் பஞ்சாப் கிங்ஸ் அணியால் வெற்றியை ஈட்ட முடியவில்லை.
அதேசமயம் பந்துவீச்சிலும் கடந்த சில போட்டிகளாக பஞ்சாப் கிங்ஸ் அணி சோபிக்க தவறிவருகிறது. அதனால் இனி வரும் போட்டியிலாவது பஞ்சாப் அணி தங்கள் தவறுகளை திருத்தி மீண்டும் அதிரடி ஆட்டத்திற்கு திரும்பும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை கடந்த சில போட்டிகளாக குறைந்த இலக்குகளை நிர்ணயித்தாலும் , தங்களது பந்துவீச்சாளர்களின் உதவியுடன் த்ரில்லர் வெற்றிகளைப் பெற்று அசத்தியுள்ளது.
இருப்பினும் மும்பை அணியின் பேட்டிங் வரிசையில் தொடர்ந்து யாரும் பெரிய ரன்களை சேர்க்காததால் பெரிய இலக்குகளை நிர்ணயிக்க தவறிவருகிறது. இதனால் இனிவரும் போட்டிகளிலாவது பெரிய இலக்குகளை நிர்ணயித்து எதிரணிக்கு சவாலளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நேருக்கு நேர்
இதுவரை இரு அணிகளும் 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 முறையும், பஞ்சாப் கிங்ஸ் அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
உத்தேச அணி
பஞ்சாப் கிங்ஸ்: கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல்,ஹென்ரிக்ஸ், நிக்கோலஸ் பூரன் / டேவிட் மாலன், தீபக் ஹூடா, ஷாருக் கான், ஃபேபியன் ஆலன், முருகன் அஸ்வின், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்
மும்பை இந்தியன்ஸ்: குயின்டன் டி காக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹார்திக் பாண்டியா, பொல்லார்ட், குர்னால் பாண்டியா, ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ் / ஜேம்ஸ் நீஷம், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.
பிளிஸ்ட்பூல் ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் : கே.எல்.ராகுல், குயின்டன் டி காக்
- பேட்ஸ்மேன்கள் : சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா, மயாங்க் அகர்வால்,ஷாருக் கான்
- ஆல்ரவுண்டர்கள் : தீபக் ஹூடா, குர்னால் பாண்டியா
- பவுலர்கள்: ராகுல் சஹார், ட்ரெண்ட் போல்ட், அர்ஷ்தீப் சிங்
Win Big, Make Your Cricket Tales Now