
IPL 2021: Punjab Kings won by 9 wickets against Mumbai indians (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிறகு 132 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 63 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 33 ரன்களை சேர்த்தனர்.