
IPL 2021 Schedule: Punjab Kings Match Details, Timings, And Venue (Image Source: Google)
கரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது மீண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளுக்கான அட்டவணை மற்றும் மைதானங்களையும் பிசிசிஐ நேற்று வெளியிட்டது.
இதில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி செப்டம்பர் 21ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவுள்ளது. அதேசமயம் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்னதாக பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மட்டுமே எட்டு லீக் போட்டிகளில் விளையாடியுள்ளன.
அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணி மீதமுள்ள 6 லீக் ஆட்டங்களில் மூன்று போட்டிகளை துபாயிலும், 2 போட்டிகள் சார்ஜாவிலும் ஓரு போட்டியை அபுதாபியிலும் விளையாடவுள்ளது.