
IPL 2021: Shahrukh worked really well with the batting coaches, says KL Rahul (Image Source: Google)
ஐபிஎல் தொடரி 45ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 165 ரன்களை குவிக்க, பின்னர் விளையாடிய பஞ்சாப் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் பஞ்சாப் அணிக்காக களமிறங்கிய தமிழக அதிரடி வீரரான ஷாருக் கான் 9 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என அட்டகாசமாக 22 ரன்களை குவித்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்நிலையில் இது குறித்து போட்டி முடிந்து பேசியுள்ள பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் “ஷாருக் கான் ஒரு சிறப்பான பேட்ஸ்மேன் என்பது வலைப்பயிற்சியில் நாங்கள் பார்த்தோம். அது மட்டுமின்றி அவர் எவ்வளவு வலிமையான பிளேயர் என்பது இந்த ஐபிஎல் தொடரின் முதல் பாகத்தில் அனைவருமே பார்த்ததுதான்.