ஐபிஎல் 2021: எஸ்.ஆர்.எச். பந்துவீச்சாளர்களிடம் திணறிய மும்பை!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி,
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.
இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, குயின்டன் டி காக் இணை களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பின்னர் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குயின்டன் டி காக் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 32 ரன்களில் ரோஹித் சர்மாவும், 10 ரன்களில் சூர்யகுமார் யாதவும் அடுத்தடுத்து விஜய் சங்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தர்.
Trending
பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன், கிரேன் பொல்லார்ட் இணை ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதில் 15 ரன்களில் இஷான் கிஷன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு டன் இணைந்து ஒரு சில பவுண்டரிகளை விளாச மும்பை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. பின்னர் ஹர்திக் பாண்டியா 7 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்களை சேர்த்தது. மும்பை அணி தரப்பில் பொல்லார்ட் 35 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Win Big, Make Your Cricket Tales Now