
IPL 2021: Virat Kohli Praises Maxwell's Match Winning Innings Against SRH (Image Source: Google)
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ரயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது.
போட்டி முடிவுக்கு பின் பேசிய ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி, மேக்ஸ்வெல்லின் ஆட்டத்தினால் தான் எங்களுக்கு இந்த வெற்றி கிடைத்தது என்று புகழ்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய விராட் கோலி, மேக்ஸ்வெல்லின் ஆட்டம் எங்களது வெற்றிக்கு வழி வகுத்தது. ஏனெனில் முதல் ஆறு ஓவர்களில் எங்களுக்கு போதுமான தொடக்கம் கிடைக்கவில்லை. ஆனால் மேக்ஸ்வெல் களமிறங்கி அரைசதம் அடித்ததற்கு பிறகு எங்கள் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்தது என்று தெரிவித்தார்.