
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 49ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழக்கத்திற்கு மாறாக கேமரூன் க்ரீன் - இஷான் கிஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். ஆனால் இந்த இணையும் சோபிக்க தவறியது. இதில் 6 ரன்களை எடுத்திருந்த க்ரீனின் விக்கெட்டை துஷார் தேஷ்பாண்டே க்ளீன் போல்டாக்கினார்.
அதன்பின் பந்துவீச வந்த தீபக் சஹார், இஷான் கிஷானை 7 ரன்களிலும், கேப்டன் ரோஹித் சர்மாவை ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை வீழ்த்தி பெவிலியனுக்கு வழியனுப்பிவைத்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த நேஹல் வதேர - சூர்யகுமார் யாதவ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.