ஐபிஎல் 2023: விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகள்; முழு விவரம்!
நடப்பாண்டு ஐபில் தொடரில் வழங்கப்பட்ட விருதுகள் மற்றும் அதற்கான பரிசுத்தொகை குறித்து இப்பதிவில் காண்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை வீரர் சாய் சுதர்சனின் அதிரடியால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது.
பின்னர் சிஎஸ்கே பேட்டிங் செய்த போது கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதையடுத்து டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி இப்போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியனானது.
Trending
இந்நிலையில் நடப்பாண்டு ஐபில் தொடரில் வழங்கப்பட்ட விருதுகள் மற்றும் அதற்கான பரிசுத்தொகை குறித்து இப்பதிவில் காண்போம்.
ஐபிஎல் 2023 சாம்பியன்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ரூ.20 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. கேப்டன் எம்.எஸ்.தோனி அதற்கான கோப்பையைப் பெற்றுக் கொண்டார்.
ஐபிஎல் 2023 2ஆவது இடம்: இந்த சீசனில் 2ஆவது இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ.13 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதற்கான விருதை பெற்றுக் கொண்டார்.
இறுதிப்போட்டி ஆட்டாநாயகன்: ஐபிஎல் இறுதிப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடிய டெவான் கான்வே ஆட்டநாயகன் விருது பெற்றார்.
வளர்ந்து வரும் வீரர்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தா ராயல்ஸ் அணியின் தொடக்க இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வளர்ந்து வரும் வீரருக்கான விருது வழங்கப்பட்டது. அவருக்குப் பதிலாக ஷிவம் துபே அந்த விருதை பெற்றுக் கொண்டார். இந்த விருதுக்கு அவருக்கு ரூ.20 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
மிகவும் மதிப்புமிக்க வீரர்: ஷுப்மன் கில் – குஜராத் டைட்டன்ஸ்
குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் ஷுப்மன் கில்லிற்கு மிகவும் மதிப்புமிக்க வீரருக்கான விருது வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் கேம் சேஞ்சருக்கான விருதும் வழங்கப்பட்டது. இந்த 2 விருதுகளுக்கும் ரூ.12 லட்சம் மற்றும் ரூ.12 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது.
கேட்ச் ஆஃப் தி சீசன்: ரஷீத் கான் – குஜராத் டைட்டன்ஸ்
குஜராத் டைட்டன்ஸ் அணியின் சிறந்த பந்து வீச்சாளரான ரஷீத் கானிற்கு கேட்ச் ஆஃப் தி சீசனுக்கான விருது வழங்கப்பட்டது.
ஃபேர்பிளே விருது: 2023ஆம் ஆண்டின் ஐபிஎல் சீசனுக்கான ஃபேர்பிளே விருது டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது.
ஆரஞ்சு கேப்: ஷுப்மன் கில் - குஜராத் டைட்டன்ஸ்
17 போட்டிகளில் விளையாடியுள்ள கில் 690 ரன்கள் வரையில் குவித்து இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான ஆரஞ்சு கேப் வைத்துள்ளார். இதற்காக அவருக்கு ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது.
பர்பிள் கேப்: முகமது ஷமி – குஜராத் டைட்டன்ஸ்
குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி 17 போட்டிகளில் 28 விக்கெட்டுகள் கைப்பற்றி பர்பிள் கேப் வென்றுள்ளார். பர்பிள் கேப் வென்ற முகமது ஷமிக்கு ரூ.15 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
முதலிடம்- சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளமிங் அணியின் சார்பக வெற்றி பெற்றதற்கான விருது பெற்றார். சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.20 கோடி வழங்கப்பட்டது.
இரண்டம் இடம் - குஜராத் டைட்டன்ஸ்
குஜராத் டைட்டன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா அணியின் சார்பாக ரன்னர் அப் விருதை பெற்றார். இதன்மூலம் ரூ.12.50 கோடி பரிசாக வழங்கப்பட்டது.
சிறந்த பிட்ச் மற்றும் மைதானம் விருது: வான்கடே மற்றும் ஈடான் கார்டன்ஸ்
மும்பை வான்கடே ஸ்டேடியம் மற்றும் கொல்கத்தா ஈடான் கார்டன்ஸ்க்கு பிட்ச் மற்றும் மைதானத்திற்கான விருது வழங்கப்பட்டது. இதில், அவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Win Big, Make Your Cricket Tales Now