
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குருப் சுற்றில் இன்னும் 9 போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் எந்த அணியும் அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையாததால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன. இப்போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்தது.
இந்தப் போட்டியில் குஜராத் அணி நீல இளஞ்சிவப்பு நிற ஜெர்ஸியில் விளையாடியது. அதன்படி களமிறங்கிய குஜராத் அணியில், முதல் ஓவரிலேயே சாஹா பூச்சியத்தில் ஆட்டமிழந்தாலும் கில் மற்றும் சாய் சுதர்ஷன் அட்டகாசமாக பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்கள் குவித்தனர். 15வது ஓவரில் சாய் சுதர்ஷன் ஆட்டமிழந்தார். 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
கில் 58 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 13 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடக்கம். சாய் சுதர்ஷன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆடிய குஜராத் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 188/9 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணி சார்பாக புவனேஷ்வர் குமார் அபாரமாக பந்து வீசினார். 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.