
ஐபிஎல் தொடரின் 16 ஆவது சீசனில் இன்று நடைபெற்ற 30ஆவது லீக் ஆட்டத்தில் கேஎல்ராகுல் தலைமயிலான லக்னோவும் , ஹர்திக் பாண்டியா தலைமயிலான குஜராத் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக கில் , விருத்திமான் சஹா களமிறங்கினர் . தொடக்கத்தில் கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா நிலைத்து ஆடினார். சஹா , பாண்டியா இணைந்து சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தனர். அணியின் ஸ்கோர் 72 ரன்னாக இருந்தபோது சஹா47 ரன்களில் வெளியேறினார், அடுத்து வந்த அபினவ் மனோகர் 3 ரன்களில் , விஜய் சங்கர்10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்தார், பின்னர் பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்ட பாண்டியா 66 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 135ரன்கள் எடுத்தது . லக்னோ சார்பில் குருனால் பாண்டியா , ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.