மூன்கூட்டிய களமிறங்கியது ஏன்? - அஸ்வின் பதில்!
சிஎஸ்கே அணிக்கு எதிராக மூன்று விக்கெடுகள் போன உடனேயே, அஸ்வின் பேட்டிங் வந்தது ஏன்? இது யார் எடுத்த முடிவு? என்பது பற்றி அவரே தனது பேட்டியில் கூறியுள்ளார்.
சிஎஸ்கே அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முதல் மூன்று விக்கெட்டுகள் விரைவாகவே பறிபோயின. நான்காவது விக்கெட்டுக்கு ஹெட்மயர் அல்லது துருவ் ஜுரல் இருவரில் ஒருவர் உள்ளே வருவர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அஸ்வின் உள்ளே வந்து மிகச்சிறப்பாக விளையாடி 22 பந்துகளில் 30 ரன்கள் அடித்துக்கொடுத்தார். அதன் பிறகு பந்துவீச்சிலும் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து முக்கியமான இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இறுதியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி, மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. விருதைப் பெற்ற பிறகு பேட்டியளித்த அஸ்வின் கூறுகையில், “இந்த விருது எனக்கு கிடைத்ததால் பலரும் ஆச்சரியப்பட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். நான் எப்போது டாப் ஆர்டரில் பேட்டிங் இறங்கினாலும், அது நான் எடுத்த முடிவு என்று அனைவரும் கருதுகின்றனர். அப்படியல்ல! அது எனக்கு கொடுக்கப்பட்ட ரோல்.
Trending
எப்போதும் முதல் விக்கெட்டில் இருந்தே பேட் அணிந்து பேட்டிங் செய்ய தயாராக அமர்ந்திருப்பேன். இது ஈசி இல்லை என்றாலும், எனக்கு நானே இதை நல்ல விதமாக உணர்கிறேன். ஏனெனில் என்னுடைய பலத்தை என்னை விட யார் நன்றாக உணர முடியும். இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த பிறகு களத்தில் நிதானமாக விளையாடுவதற்கு நான் சரியாக இருப்பேன் என்று இறக்கினார்கள். இதனால் தான் மூன்றாவது விக்கெட் போனபிறகு நான் உள்ளே வந்தேன்.
மேலும், டெஸ்ட் போட்டியை விளையாடிய பிறகு நல்ல பார்மில் நான் ஐபிஎல் போட்டிகளுக்கு வந்தேன். இதனால், எனது பந்துவீச்சில் பந்தை நன்றாக டர்ன் செய்ய முடிந்தது மற்றும் நல்ல சுழற்சி கொடுக்க முடிந்தது. போட்டியில் தோற்க்கிறோமோ, ஜெயிக்கிறோமோ. அதில் முடிவு நான் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now