கோலி பெயரைச் சொல்லி கோஷமிடுவதை நான் ரசிக்கிறேன் - நவீன் உல் ஹக் !
மைதானத்தில் ரசிகர்கள் விராட் கோலியின் பெயரைச் சொல்லி என்னைப் பார்த்து கோஷமிடுவதை நான் ரசிக்கிறேன் என லக்னோ அணி வீரர் நவீன் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் குவாலிபயர் இரண்டுக்கான தகுதிச்சுற்றில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் மும்பை 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு லக்னோ அணியின் வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் தனது சிறப்பான பந்துவீச்சால் மிகப்பெரிய தலைவலியைக் கொடுத்தார்.
நான்காவது ஓவரை வீச வந்த அவர் உடனுக்குடன் கேப்டன் ரோஹித் சர்மா விக்கெட்டை காலி செய்தார். பத்தாவது ஓவருக்கு பின் இரண்டாவது ஸ்பெல்லுக்கு வந்து ஒரே ஓவரில் சூரியகுமார் மற்றும் கேமரூன் இருவரையும் தூக்கி மும்பை அணிக்கு பெரிய சிக்கலை உருவாக்கினார். இதற்கு அடுத்து மூன்றாவது ஸ்பெல்லுக்கு வந்த அவர் திலக் வர்மாவையும் ஆட்டம் இழக்க வைத்தார். இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் பந்து வீசி 38 ரன்கள் தந்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
Trending
தோல்விக்குப் பின் பேசிய நவீன் உல் ஹக், “மைதானத்தில் ரசிகர்கள் விராட் கோலியின் பெயரைச் சொல்லி என்னைப் பார்த்து கோஷமிடுவதை நான் ரசிக்கிறேன். மைதானத்தில் உள்ள ரசிகர்கள் விராட் கோலி பெயரையோ இல்லை வேறு எந்த வீரனின் பெயரைச் சொல்லி உச்சரிப்பதையும் எனக்கு மிகவும் பிடிக்கும். இது எனது அணிக்காக நான் நன்றாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தை தருகிறது.
நான் வெளியில் இருந்து வரும் சத்தத்திற்கு கவனம் கொடுப்பதில்லை. எனது சொந்த கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். கூட்டம் கோஷமிட்டால் அல்லது யாராவது ஏதாவது என்னைப் பேசினால் அது என்னைப் பாதிக்காது. தொழில்முறை வீரராகிய நீங்கள் அதை உங்கள் முன்னேற்றத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் போட்டியில் நிலைமைகளை மதிப்பிடுகிறீர்கள். அந்த நிலைமைக்கு அவர்கள் என்ன திருப்பி வழங்குகிறார்கள் என்று பார்க்கிறீர்கள். ஆடுகளம் கொஞ்சம் உதவியாக இருப்பதாக நினைத்தேன். ஆனால் அதற்காக நான் ஒரு ஓவருக்கு மூன்று நான்கு மெதுவான பந்துகளை வீச விரும்பவில்லை. வேகத்தை மட்டும் மாற்றி மாற்றி வீச விரும்பினேன். மேலும் லைன் மற்றும் லென்த்தை மாற்றி வீசினேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now