Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2023: ராஜஸ்தானை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

Advertisement
IPL 2023: LSG has pulled off a stunning win against RR, defending 154 and clinching the match by 10
IPL 2023: LSG has pulled off a stunning win against RR, defending 154 and clinching the match by 10 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 19, 2023 • 11:24 PM

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசனில் ஜெய்ப்பூரில் நடக்கும் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்ய, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி களமிறங்கியது.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 19, 2023 • 11:24 PM

இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் இணை வழக்கத்துக்கு மாறாக நிதானமாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், கே.எல்.ராகுல் 39 ரன்களில் அவுட்டானார்.

Trending

இதன்பின் வந்தவர்களில் ஆயுஷ் பதோனி ஒரு ரன்னிலும், தீபக் ஹூடா 2 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். மறுபுறம் பொறுப்பாக ஆடிய கைல் மேயர்ஸ் அரைசதமடித்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். எனினும் ஸ்டோய்னிஸ் 21 ரன்கள், நிகோலஸ் பூரன் 29 ரன்கள் எடுக்க, இறுதியில் லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினார்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஷ்வால் - ஜோஸ் பட்லர் இணை வழக்கத்திற்கு மாறாக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக்கொடுத்தது. 

அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஷ்வால் 44 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகினார். அவர்களைத் தொடர்ந்து 40 ரன்களில் ஜோஸ் பட்லரும், 2 ரன்களில் ஷிம்ரான் ஹெட்மையரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

இறுதியில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. லக்னோ அணி தரப்பில் கடைசி ஓவரை ஆவேஷ் கான் வீசினார். அந்த ஓவரில் வெறும் 8 ரன்களை மட்டுமே கொடுத்த அவர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். 

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றையைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement