
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் லக்னொ சூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 193 ரன்களைக் குவித்தது.
இதியடுத்து 194 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்தி ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 143 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டெல்லி அணியில் அதிகபட்சமாக கேப்டன் டேவிட் வார்னர் 48 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். லக்னோ அணியில் மார்க் வுட் சிறப்பாக பந்துவீசி 14 ரன்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஆவேஸ் கான் 2 விக்கெட்டுகளையும் சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஸ்னாய் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் தனது வெற்றி கணக்கை தொடங்கியது லக்னோ அணி. 4 ஓவர்கள் பந்துவீசி 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மார்க் வுட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.