அணியின் தோல்விக்கு ஒட்டுமொத்த அணியும் தான் காரணம் - அஜித் அகர்கர்!
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாருமே சரியாக ஆடாத போது ஒரு விரலை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும் என பிரித்வி ஷாவுக்கு ஆதரவாக அஜித் அகர்கார் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 31ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை ஏழு ஆட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன. அதில் குஜராத் அணி இரண்டு வெற்றியுடன் முதலிடத்தில் இருக்கிறது. நேற்று குஜராத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் குஜராத் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிகளின்பட்டியலில் இரண்டு வெற்றிகள் உடன் முதலிடத்திற்கு சென்றது.
குஜராத் அணியின் இளம் வீரரான சாய் சுதர்சன் மிக சிறப்பாக ஆடி அரை சதம் எடுத்தார். அவர் நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். இந்தத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா முதல் இரண்டு போட்டிகளிலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தத் தொடருக்கு முன்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவரது ஃபார்ம் முதல் இரண்டு போட்டிகளிலும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் விமர்சிகர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் துவக்க ஆட்டக்காரருமான வீரேந்தர் சேவாக் ப்ரீத்தி ஷாவை விமர்சித்து இருந்தார்.
Trending
இந்நிலையில் இது குறித்து பேசியிருந்த சேவாக் “பிரத்விஷா சுப்மன் கில்லை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். இருவரும் ஒன்றாக தான் அண்டர் 19 விளையாட்டினார்கள். தற்போது கில் டெஸ்ட் டி20 மற்றும் ஒரு நாள் போட்டி என அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் இந்தியா அணிக்கு முதன்மையான பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார். ஆனால் பிரத்விஷா எங்கு இருக்கிறார் என்பதை அவர் யோசித்துப் பார்க்க வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் டெல்லி அணியின் துணை பயிற்சியாளரும் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளருமான அஜித் அகர்கர் சேவாக்கிற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர் “அணியின் தோல்விக்கு ஒட்டுமொத்த அணியும் தான் காரணம். ஒரு வீரராயோ அல்லது இருவீரர்களையோ குறை சொல்வதில் அர்த்தம் ஒன்றும் இல்லை. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாருமே சரியாக ஆடாத போது ஒரு விரலை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும்.
நீங்கள் குறை சொல்லும் முன் ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். அவர் தனது முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த வீரர் என்பதையும் மறந்துவிட வேண்டாம். நிச்சயமாக வெகு விரைவிலேயே பார்முக்கு திரும்பி மிகச் சிறந்த ஒரு இன்னிங்ஸ் கொடுப்பார்” என தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now