
IPL 2023: No Fifties In GT's Innings Still they have posted a healthy total on the board! (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 23ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக விருத்திமான் சஹா - ஷுப்மன் கில் இணை களமிறங்கினர். இதில் விருத்திமான் சஹா 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் டிரெண்ட் போல்ட்டின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய சய் சுதர்சன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகினார். அதனைத்தொடர்ந்து ஷுப்மன் கில்லுடன் இணைந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.