ஐபிஎல் 2023: பஞ்சாபை வீழ்த்தில் பிளே ஆஃப் ரேஸில் நீடிக்கும் ராஜஸ்தான்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.
அந்தவகையில் இன்று நடைபெற்ற 66ஆவது லீக் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Trending
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்சிம்ரன் சிங் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அதர்வா டைடே 19 ரனகளிலும், ஷிகர் தவான் 17 ரன்களில் ஷிகர் தவானும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதையடுத்து கடந்த போட்டியில் இறுதிவரை அதிரடி காட்டி அசத்திய லியாம் லிவிங்ஸ்டோன் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் நவ்தீப் சைனி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு திருபினார். அதன்பின் இணைந்த ஜித்தேஷ் சர்மா - சாம் கரண் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜித்தேஷ் சர்மா 44 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து சாம் கரனுடன் இணைந்த ஷாரூக் கானும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரும் சரசரவென உயர்ந்தது. இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 1187 ரன்களைச் சேர்த்தது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாம் கரன் 2 சிக்சர், 4 பவுண்டரி என 49 ரன்களையும், ஷாருக் கான் 2 சிக்சர், 4 பவுண்டரிகள் என 41 ரன்களையும் சேர்த்து அசத்தினர். ராஜஸ்தான் தரப்பில் நவ்தீப் சைனி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு பேரிடியாக அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் ரன்கள் ஏதுமின்றி ரபாடா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஷ்வால் - தேவ்தத் படிக்கல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், விக்கெட் இழப்பையும் தடுத்தனர்.
அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தேவ்தத் படிக்கல் அரைசதம் கடந்த கையோடு 3 சிக்சர், 5 பவுண்டரி என 51 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் வெறும் 2 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதேசமயம் மறுபக்கம் தனது அரைசதத்தைக் கடந்த யஷஸ்வி ஜெய்ஷ்வால் 50 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ஷிம்ரான் ஹெட்மையர் - ரியான் பராக் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் 20 ரன்களை எடுத்திருந்த ரியான் பராக் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 46 ரன்களில் ஷிம்ரான் ஹெட்மையரும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இறுதியில் அந்த அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது. அதன்படி ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தங்களது கடைசி போட்டியில் தோற்கும் பட்சத்தில் ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now